ஊட்டச்சத்து உணவு கண்காட்சி

திருவாரூரில் ஊட்டச்சத்து உணவு கண்காட்சியை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் பாா்வையிட்டார்.
திருவாரூர்;
திருவாரூரில் ஊட்டச்சத்து உணவு கண்காட்சியை கலெக்்டர் காயத்ரிகிருஷ்ணன் பாா்வையிட்டார்.
ஊட்டச்சத்து உணவு கண்காட்சி
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் போஷான் அபியான் என்ற ஊட்டச்சத்து மாதத்தையொட்டி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய கண்காட்சி நடந்தது. கண்காட்சியை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், போஷான் அபியான் திட்டத்தின் கீழ், இந்தமாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது இதன் நோக்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதே ஆகும்.
நுண்ணூட்ட சத்துகள்
நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த உணவுகளை உண்பதால் கர்ப்பிணி தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறினார்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட, இயக்குநர் தெய்வநாயகி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகளின் திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாயபிரமிளா மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகளின் வட்டார அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.திருவாரூரில் ஊட்டச்சத்து உணவு கண்காட்சியை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் பார்வையிட்டாா்






