இருதய நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி


இருதய நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

இருதய நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

தென்காசி

தென்காசி:

உலக இருதய தினத்தை முன்னிட்டு, திருவனந்தபுரம் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை, தென்காசி மீரான் மருத்துவமனை, இலஞ்சி பாரத் வித்யா மந்திர் பள்ளி இணைந்து இருதய நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இலஞ்சி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், ஆரோக்கியமான இதயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாணவர்கள் ஒன்றிணைந்து இதய வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதய நோய் பற்றியும், உடற்பயிற்சி, ஆரோக்கியத்திற்கான உணவு பழக்கவழக்கங்கள் குறித்தும் மீரான் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் முகம்மது மீரான் விளக்கி கூறினார். மீரான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அப்துல் அஸீஸ், பாரத் வித்யா மந்திர் பள்ளி நிர்வாகிகள் மோகனகிருஷ்ணன், காந்திமதி மோகனகிருஷ்ணன், முதல்வர் வனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருவனந்தபுரம் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை பொது மேலாளர் சரவணன், மேலாளர்கள் அய்யப்பன், முத்துகுமரன், ஷெரின் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் மருத்துவ சேவை மையம், தென்காசி மீரான் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதியுடன் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story