இருதய நோய் விழிப்புணர்வு முகாம்


இருதய நோய் விழிப்புணர்வு முகாம்
x

நெல்லையில் இருதய நோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் சங்கம், நெல்லை வட்டார போக்குவரத்து கழகம் மற்றும் அருணா கார்டியாக் கேர் இணைந்து இலவச இருதய நோய் விழிப்புணர்வு முகாம் நடத்தினர். இருதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் அருணாச்சலம் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வந்த மக்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


Next Story