பேட்டராய சாமி கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு


பேட்டராய சாமி கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பேட்டராய சாமி கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நாளை (திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. தொடர்ந்து கோவில்களில் விடிய, விடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அந்த வழியாக சாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

இந்தநிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தேன்கனிக்கோட்டையில் உள்ள பேட்டராய சாமி கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. இதையொட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க தேன்கனிக்கோட்டை சப்தகிரி மகாலில் 10 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்தது.


Next Story