ரெயில் பயணிகளிடம் பலத்த சோதனை


ரெயில் பயணிகளிடம் பலத்த சோதனை
x

சுதந்திரதினத்தை முன்னிட்டு தூத்துக்குடிரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளிடம் பலத்த சோதனை நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

சுதந்திரதின விழா

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களான ரெயில் நிலையம், பஸ்நிலையம், கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரின்ஸ் மேத்யூ, ராமகிருஷ்ணன், ரெயில்வே பாதுகாப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாகிருஷ்ணன், நாராயணன் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்தில் ரெயில்களில் பயணம் செய்வதற்காக வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். ரெயில் பெட்டிகள் முழுவதும் சோதனை செய்யப்பட்டன. பயணிகளின் பைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதிக்கப்பட்டன.

தொட வேண்டாம்

இது குறித்து இன்ஸ்பெக்டர் கண்ணன் கூறும் போது, சுதந்திரதினத்தை முன்னிட்டு விரும்பதகாத சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை வருகிற 16-ந் தேதி தொடர்ந்து நடைபெறும்.கேட்பாரற்று கிடக்கும் எந்த பொருட்களையும் பயணிகள் தொட வேண்டாம். சந்தேகப்படும்படியான நபர்களையோ, பொருட்களையோ பயணிகள் கண்டால்139-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறினார்.


Next Story