போடி அருகே வனப்பகுதியில் பயங்கர தீ


போடி அருகே வனப்பகுதியில் பயங்கர தீ
x
தினத்தந்தி 23 Feb 2023 2:00 AM IST (Updated: 23 Feb 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே வனப்பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

தேனி

போடி அருகே உள்ள பிச்சாங்கரை பகுதி மற்றும் வடக்கு மலையில் உள்ள வனப்பகுதியில் நேற்று மாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அப்போது தீ மளமளவென பரவி வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரம், செடி, கொடிகளில் பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.


Related Tags :
Next Story