ஏலகிரி மலையில் கடும் பனிமூட்டம்


ஏலகிரி மலையில் கடும் பனிமூட்டம்
x

ஏலகிரி மலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு மலையில் நேற்று முன்தினம் முதலே மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை கடுமையான பனி மூட்டமாக இருந்தது. எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

இந்த பனிமூட்டம் காரணமாக ஏலகிரிமலையில், ஊட்டியில் இருக்கும் பருவநிலை போல் இருந்தது.


Next Story