பலத்த மழை


பலத்த மழை
x

பலத்த மழை பெய்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பெரம்பலூரில் நேற்று காலை நேரத்தில் அவ்வப்போது மழை தூறிக் கொண்டிருந்தது. பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் ெபருக்கெடுத்து ஓடியது. மழையால் ேபாதிய ெவளிச்சம் இல்லாத நிலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மாலை நேரத்தில் பெய்த மழையால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.


Next Story