கொட்டித்தீர்த்த கன மழை


கொட்டித்தீர்த்த கன மழை
x

கபிஸ்தலம் பகுதியில் கன மழை கொட்டித்தீர்த்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் பகுதியில் கன மழை கொட்டித்தீர்த்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொட்டித்தீர்த்த கன மழை

கபிஸ்தலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவில் காணப்பட்டது. இதன் காரணமாக மின்விசிறி இல்லாமல் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கபிஸ்தலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மதியம் முதல் 2 மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. கபிஸ்தலம், மேல கபிஸ்தலம், சருக்கை, உம்பலாப்பாடி, சத்தியமங்கலம், வாழ்க்கை, ராமானுஜபுரம், உமையாள்புரம், அண்டக்குடி, தியாக சமுத்திரம், அலவந்திபுரம், திருமண்டங்குடி, கூனஞ்சேரி, பட்டவர்த்தி, ஆதனூர், மருத்துவக்குடி, ஓலைப்பாடி, கொந்தகை, பொன்பேத்தி, திருவையாவூர், திருவிஜயமங்கை, துரும்பூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடை நெல், உளுந்து, எள், பருத்தி, கரும்பு, வாழை, உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் இந்த மழை ஏற்றதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கும்பகோணம்

இதேபோல் கும்பகோணத்தில் நேற்று மதியம் விட்டு விட்டு மழை பெய்தது. கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி அளவில் கன மழை பெய்தது, இந்த மழை 15 நிமிடங்கள் மட்டுமே நீடித்ததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து மாலை 4 மணி வரை விட்டுவிட்டு மழை பெய்தது.


Next Story