போடி, தேனியில் பலத்த மழை
போடி, தேனியில் பலத்த மழை பெய்தது.
தேனி
போடி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இந்தநிலையில் மாலையில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் போடி நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது. தொடர் மழையால் போடி கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேனியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின்போது ஏற்பட்ட இடி-மின்னல் காரணமாக தேனி கே.ஆர்.ஆர். நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி.க்கள் பழுதானது. 2 வீடுகளில் மின்விசிறி, யு.பி.எஸ். போன்றவை பழுதானது. மேலும் சில வீடுகளிலும் மின்சாதன பொருட்கள் பழுதானதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story