கனமழை எதிரொலி; நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - கலெக்டர் உத்தரவு
கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழைத் தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று தொடர் மழை பெய்தது.
மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், கனமழை காரணமாக நாகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கும், நாகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகையில் மட்டும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது