கீழ்வேளூர் பகுதியில் 1 மணிநேரம் பலத்த மழை
கீழ்வேளூர் பகுதியில் 1 மணிநேரம் பலத்த மழை
நாகப்பட்டினம்
கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்து உள்ளன. மேலும் பச்சை பயிறு, உளுந்து மழை நீரில் மூழ்கி அழுகியது. நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்தது. மாலை 5 மணி அளவில் தேவூர், வெண்மணி, காக்கழனி, கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, வலிவலம், ஆதமங்கலம், கொடியலத்தூர், கொளப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை 1 மணிநேரம் நீடித்தது. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். நேற்று இரவு மயிலாடுதுறையில் மீண்டும் மழை பெய்தது.
Related Tags :
Next Story