கும்பகோணத்தில் 1 மணிநேரம் பலத்த மழை
கும்பகோணத்தில் 1 மணிநேரம் பலத்த மழை
கும்பகோணத்தில் 1 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
1 மணி நேரம் பலத்த மழை
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கிய மழை தொடர்ந்து ஒருவாரம் பெய்தது. அதன் பின்னர் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 4 நாட்களாக கும்பகோணம் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3 மணி அளவில் திடீரென கும்பகோணத்தில் பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது.
மழைநீர் தேங்கியது
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நி்ன்றது. கும்பகோணம் காந்தி பூங்கா சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.