தாயில்பட்டியில் 2 மணி நேரம் பலத்த மழை
தாயில்பட்டியில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
தாயில்பட்டி,
தாயில்பட்டியில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
பலத்த மழை
தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் அடித்தது. இந்தநிைலயில் நேற்று மதியம் கணஞ்சாம்பட்டி, தாயில்பட்டி, சுப்பிரமணியபுரம், சேதுராமலிங்கபுரம், மேல ஒட்டம்பட்டி, வெற்றிலையூரணி, கீழத் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீெரன மதியம் 1 மணிக்கு மழை பெய்தது. நேரம் ஆக ஆக பலத்த மழையாக பெய்தது.
இந்த மழை 3 மணி வரை நீடித்தது. இ்ந்த மழையினால் சீனி அவரைக்காய், வெண்டைக்காய், தக்காளி, உளுந்து, பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வீடுகளுக்குள் புகுந்த நீர்
கணஞ்சாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த கிழக்குத்தெருவில் மழை நீர் செல்ல வாருகால் வசதி எதுவும் இல்லாததால் மழைநீர் தெருகளில் தேங்கியது. ஒரு சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.
கிழக்குத்தெருவில் சாலை வசதியும் இல்லாததால் குண்டும், குழியுமாக இருக்கிறது. தற்போது சாலையில் மழை நீர் தேங்கி இருப்பதால் இதனை கடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகையால் உடனடியாக கிழக்குத்தெருவில் வாருகால் அமைத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.