2-வது நாளாக பலத்த மழை


2-வது நாளாக பலத்த மழை
x

சோளிங்கரில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் 92 மில்லி மீட்டர் மழை பெய்ததால் சோளிங்கர் அடுத்த போளிப்பாக்கம் கிராமத்தில் மஞ்ச கிணறு தெரு பெருமாள் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் கழிவுநீர் கால்வாய் நிரம்பி வீட்டிற்குள் புகுந்தது. ஒன்றியக் குழு துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன் சென்று பார்வையிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரப்படு, தற்காலிகமாக மழை நீர் வீடுகளுக்கு செல்லாத வாறு தடுப்பு அமைக்கப்பட்டது. நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது.


Next Story