ஆலங்குளம் பகுதியில் பலத்த மழை


ஆலங்குளம் பகுதியில் பலத்த மழை
x

ஆலங்குளம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பலத்த மழை

ஆலங்குளம் சங்கரமூர்த்திபட்டி, ராசாப்பட்டி, கோபாலபுரம், புளியடிபட்டி, சுண்டங்குளம், லட்சுமிபுரம், கண்மாய்பட்டி, கரிசல்குளம், தொம்பகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. நேரம் ஆக ஆக பலத்த மழையானது.

இந்த மழை இரவு 8.30 மணி வரை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்றும் பலத்த மழை பெய்தது. 1½ மணி நேரம் பெய்த இந்த மழையினால் ஊருணி உள்ளிட்ட நீர்வரத்து பாதைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பருத்தி, மக்காச்சோளம் ஆகியவற்றை சாகுபடி செய்து இருந்தனர். மழையை மட்டும் நம்பி சாகுபடி செய்த மக்காச்சோளம், பருத்தி போன்றவை மழை பொய்த்து போனதால் முைளக்கவில்லை. இதனால் 2-வது முைறயாக மறுபடியும் உழுது அடி உரம் வைத்து பருத்தி, மக்காச்சோளம் ஆகியவற்றை மீண்டும் நட்டனர். அவைகள் யாவும் முளைத்து பயிராக உள்ளது. இந்தநிலையில் தற்போது பெய்த மழை விவசாயத்திற்கும் பெரிதும் உதவியாக இருக்கும். ஆதலால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Related Tags :
Next Story