அந்தியூரில் கனமழை


அந்தியூரில் கனமழை
x

மழை

ஈரோடு

அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் சாரல்மழை பெய்ய தொடங்கியது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் பலத்த மழையாக மாறியது. சுமார் 1 மணி நேரம் நிற்காமல் கனமழை பெய்தது.

இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. ரோடுகளில் தண்ணீர் ஓடியது. இதன் காரணமாக ரோட்டோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டார்கள்.


Related Tags :
Next Story