அரவக்குறிச்சி பகுதியில் பலத்த மழை
அரவக்குறிச்சி பகுதியில் பலத்த மழை பெய்தது.
கரூர்
அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் மாலையில் 5 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒருமணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றதை காணமுடிந்தது. பலர் குடைபிடித்து சென்றனர். இந்த திடீர் மழையால் அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- கரூர்-8, கிருஷ்ணராயபுரம்-24, மாயனூர்-21. மொத்தம் - 53 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
Related Tags :
Next Story