அரியலூரில் பலத்த மழை
அரியலூரில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து மாலை குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் கருமேகம் சூழ்ந்து இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை உடையார்பாளையம், கழுமங்கலம், முனியத்திரையான்பட்டி, தத்தனூர், மனகெதி, வெண்மான்கொண்டான், விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், நடுவலூர், காடுவெட்டாங்குறிச்சி, பருக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் திடீரென வானம் இருண்டு மழை பெய்தது. மாலை 6 மணி வரை மழை நீடித்தது. இதனால் கடலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மழை காரணமாக வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சியானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.