அய்யம்பேட்டை, பாபநாசம் பகுதிகளில் பலத்த மழை


அய்யம்பேட்டை, பாபநாசம் பகுதிகளில் பலத்த மழை
x

அய்யம்பேட்டை, பாபநாசம் பகுதிகளில் பலத்த மழை

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டை, பாபநாசம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பயிர்கள் மூழ்கும் அபாயம் இருப்பதால் காவிரி ஆற்றில் தண்ணீர் அளவை குறைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டை பகுதியில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழையால் ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயாரான வாழை மரங்களும் முறிந்து விழுந்தது. குறிப்பாக கொள்ளிடம் கரையோர கிராமங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கு தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கிய நிலையில் நேற்று பெய்த மழையினால் படுகை நிலங்களிலும், கரையோர வயல்களிலும் மழை தண்ணீர் தேங்கி பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் குறுவை பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். தற்போது காவிரி ஆற்றில் முழு அளவில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்தால் பயிர்கள் மூழ்கி விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே காவிரி ஆற்றில் உடனடியாக தண்ணீர் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாபநாசம்

இதேபோல் பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். வல்லம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

-


Next Story