போடியில் பலத்த மழை: கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு


போடியில் பலத்த மழை:  கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x

போடியில் பலத்த மழை பெய்ததால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு்ள்ளது

தேனி

தேனி மாவட்டத்தின் பல இடங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. குறிப்பாக போடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், போடி அணைப்பிள்ளையார் தடுப்பணை, தேனியில் உள்ள தடுப்பணை பகுதிகளில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் சீறிப் பாய்ந்து ஓடியது.

இந்த வெள்ளத்தில் மரங்கள், மரக்கட்டைகள் போன்றவையும் அடித்து வரப்பட்டு ஆங்காங்கே கரை ஒதுங்கின. தேனி கொட்டக்குடி ஆறு தடுப்பணையில் சீறிப் பாய்ந்த வெள்ளத்தை பொதுமக்கள் பலரும் வேடிக்கை பார்த்துச் சென்றனர். அதுபோல், முல்லைப்பெரியாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முல்லைப்பெரியாற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் ஓடியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றுப் பகுதிக்கு குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என்று போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.


Next Story