சாத்தூர் பகுதியில் பலத்த மழை
சாத்தூா் பகுதியில் பெய்த பலத்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சாத்தூர்,
சாத்தூா் பகுதியில் பெய்த பலத்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பலத்த மழை
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடும் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சாத்தூர், நத்தத்துப்பட்டி, சிறுக்குளம், சொக்கலிங்கபுரம், தெற்குப்பட்டி, சின்னஓடைப்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி புதுச்சூரங்குடி, ரெங்கப்பநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
திடீரென பெய்த கோடை மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து 4 மணி முதல் 6.30 மணி வரை மழை பெய்ததால் மின்சாரம் தடை செய்யப்பட்டது.
விவசாயிகள் மகிழ்ச்சி
சாத்தூர் நகர் முக்கிய சாலையில் நீதிமன்ற பகுதியிலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை சாலை மோசமாக உள்ளதால் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
இந்த மழை விவசாயத்திற்கு மிகவும் நல்லது என விவசாயிகள் கூறினர். தொடர்ந்து மழைபெய்தால் கத்தரிக்காய், வெண்டைக்காய், சீனி அவரைக்காய் ஆகிய பயிர்களின் விளைச்சல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினார்.