சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை - 13 விமானங்கள் தாமதமாக இயக்கம்


சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை - 13 விமானங்கள் தாமதமாக இயக்கம்
x

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையால் 13 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சென்னை,

சென்னையின் நகர மற்று புறநகர் பகுதிகளில், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஆலந்தூர், கிண்டி, பரங்கிமலை, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் கனமழையால் சென்னை நகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இடியுடன் கனமழை பெய்தததால், திருச்சி, புனே, கொல்கத்தா, டெல்லி, மதுரை, பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த 6 விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. மழை நின்றதும் விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின.

இதேபோல, சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், கவுகாத்தி, கொல்கத்தா, கோவை, டெல்லி, மதுரை, இலங்கைக்கு செல்லவேண்டிய 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.


Next Story