சென்னையில் கனமழை; 37 மரங்கள் சாய்ந்தன


சென்னையில் கனமழை; 37 மரங்கள் சாய்ந்தன
x

சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக 37 மரங்கள் சாய்ந்தன.

சென்னை

சென்னையில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த 4 நாட்களாக திடீர் திடீரென மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தும், மழைநீர் சாலை மற்றும் தெருக்களில் குளம் போல் தேங்கியவாறும் காணப்படுகிறது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட தகவலின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 37 மரங்கள் விழுந்துள்ளன.

அதிகபட்சமாக கோடம்பாக்கம் மணடலத்தில் 10 மரங்களும், தேனாம்பேட்டை, திரு.வி.க.நகர் மண்டலத்தில் தலா 5 மரங்களும் விழுந்துள்ளன. விழுந்த மரங்கள் அனைத்தும் மாநகராட்சி அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் விரைந்து அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 19 இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தேங்கிய மழைநீரை அகற்றும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது.


Next Story