சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை.!


சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை.!
x

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதியில் நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது.

மேலும் சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.

இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னை சென்ட்ரல், , எழும்பூர், ஈக்காட்டுத்தாங்க, அசோக் நகர், கே.கே. நகர், வளசரவாக்கம், போரூர் , அண்ணாநகர், மீனம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மேலும் வண்டலூர், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.


Next Story