கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த மழை


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த மழை
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், ரிஷிவந்தியம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான இடங்களில் குளம் போல் தேங்கியது. இதேபோல் நேற்று சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் மாவட்டத்தில் அதிகபட்சமாக வடசிறுவளூரில் 70 மில்லி மீட்டரும், குறைந்த பட்சமாக கடுவனூரில் 8 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருவதால் நீர், நிலைகளுக்கு தண்ணீர் வரத்து வரத்தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story