கொடுமுடி, சென்னிமலை பகுதிகளில் பலத்த மழை


கொடுமுடி, சென்னிமலை பகுதிகளில் பலத்த மழை
x

கொடுமுடி, சென்னிமலை பகுதிகளில் பலத்த மழை பெய்தது

ஈரோடு

கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. 6.30 மணி முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இரவு 8 மணியை கடந்தும் மழை பெய்தது.

இதேபோல் சென்னிமலை பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் சுமார் 45 நிமிடங்கள் மழை பெய்தது. இதனால் சென்னிமலை வாரச்சந்தைக்கு வந்த பொதுமக்கள் நனைந்தபடியே சென்றனர். அதேபோல் சென்னிமலையை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.


Related Tags :
Next Story