கொட்டாம்பட்டி பகுதிகளில் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி
கொட்டாம்பட்டி பகுதிகளில் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
மதுரை
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்ய ஆரம்பித்தது. இந்த கனமழையானது சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. இந்த மழையால் கொட்டாம்பட்டி, வலைச்சேரிபட்டி, பள்ளபட்டி பூமங்களப்பட்டி, சொக்கலிங்கபுரம், பாண்டாங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் கொட்டாம்பட்டி பகுதிகளில் கோடை சாகுபடிக்காக நிலக்கடலை மற்றும் பயறு வகைகள் பயிர் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story