குமரி அணை பகுதிகளில் சாரல் மழை


குமரி அணை பகுதிகளில் சாரல் மழை
x

குமரி அணை பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனாலும் சில இடங்களில் சாரல் மழையும் பெய்கிறது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள மலையோரம் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய தண்ணீர் அளவும் அதிகரித்து வருகிறது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தின் சில பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பெருஞ்சாணி- 12.4, புத்தன் அணை- 11.8, மாம்பழத்துறையாறு- 5.4, ஆனைகிடங்கு- 4.2, சுருளோடு- 1 என பதிவாகி இருந்தது. இதுபோல் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 130 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் வருகிறது. முக்கடல் அணையில் இருந்து மாநகரில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 8.6 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.


Next Story