கீழ்வேளூர் பகுதிகளில் பலத்த மழை


கீழ்வேளூர் பகுதிகளில் பலத்த மழை
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே வலிவலம், சாட்டியக்குடி, கொளப்பாடு, கொடியலாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை பெய்த பலத்த மழையால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் வலிவலம் பகுதியில் பெய்த மழை காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உலர வைப்பதற்காக வைத்திருந்த நெல்மணிகள் மழையில் நனைந்தன.


Next Story