மதுரையில் பலத்த மழை; மரங்கள் சாய்ந்தன
மதுரையில் நேற்று பலத்த மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
மதுரையில் நேற்று பலத்த மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
மதுரையில் நேற்று பலத்த மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
பலத்த மழை
மதுரையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்தது வருகிறது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. மாலைவேளைகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 4.45 மணிக்கு மேல் மதுரை நகர் பகுதிகளில் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
மரங்கள் சாய்ந்தன
சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் இடி-மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. அந்த காற்றுக்கு தல்லாகுளம், தமுக்கம், மாநகராட்சி பூங்கா, மாநகராட்சி நீச்சல்குளம், அழகர்கோவில் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்த மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போக்குவரத்து போலீசார் அங்கு வந்து வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி அனுப்பி வைத்தனர்.
மின்தடை
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கீழே முறிந்து விழுந்த மரங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மழையின் காரணமாக நேற்று அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் நனைந்தபடியே சென்றனர். மழைநீரால் தல்லாகுளம், தமுக்கம், புதூர், மாட்டுத்தாவணி, சிம்மக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் மின்சாரமும் தடைபட்டது. பின்னர் அது சரி செய்யப்பட்டது. மேலும் இரவு நேரத்திலும் மழை தொடர்ந்து பெய்து வந்தது.
ெகாட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரங்களாக சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு கொட்டாம்பட்டி, வலைச்சேரிபட்டி, உதினிப்பட்டி, சொக்கலிங்கபுரம், உள்ளிட்ட சில பகுதிகளில் 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. மேலும் கோடை விவசாயம் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.