நெல்லையில் பலத்த மழை


நெல்லையில் பலத்த மழை
x

நெல்லையில் நேற்று பலத்த மழை பெய்தது.

திருநெல்வேலி

நெல்லையில் நேற்று பலத்த மழை பெய்தது.

மேலடுக்கு சுழற்சி

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று நெல்லை மாவட்டத்தில் மழை பெய்தது. நெல்லை மாநகரில் நேற்று மாலையில் வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. மாலை 5 மணிக்கு நெல்லை மாநகரில் வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, டவுன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, டவுன் பொருட்காட்சி திடல் பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. நெல்லை சந்திப்பு பகுதிகளில் உள்ள சாலையில் மழை நீர் ஆறாக ஓடியது.

போக்குவரத்து பாதிப்பு

மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

மேலும் நெல்லை சந்திப்பு பகுதி, வண்ணார்பேட்டை முதல் சமாதானபுரம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் வரை வெளுத்து வாங்கியது.


Next Story