பெரம்பலூரில் பலத்த மழை


பெரம்பலூரில் பலத்த மழை
x

பெரம்பலூரில் பலத்த மழை பெய்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அவ்வப்போது விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் பெரம்பலூர் மாவட்டம் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் இல்லாமல் குளு, குளுவென காணப்பட்டது. இரவு நேரத்தில் வேப்பந்தட்டை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் அந்தப்பகுதிகளில் தற்பொழுது அறுவடை செய்து சாலைகளில், களங்களில் காய வைத்துள்ள மக்காச்சோளம், எள் ஆகியவை பலத்த மழையில் நனைந்து பாதிப்பிற்குள்ளானது. இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story