பூம்புகார் பகுதியில் பலத்த மழை


பூம்புகார் பகுதியில் பலத்த மழை
x

பூம்புகார் பகுதியில் பலத்த மழை பெய்தது.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகார் பகுதியில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் தருமகுளம் கடைத்தெருவில் தண்ணீர் தேங்கியது. கடந்த ஒரு வாரமாக பூம்புகார் பகுதியில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று பெய்த திடீர் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். சிறு மழை பெய்தால் கூட பூம்புகார் மற்றும் திருவெண்காடு பகுதியில் மின்தடை ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. அதே போல் நேற்றும் பூம்புகார் பகுதியில் திடீர் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.


Next Story