புதுக்கோட்டையில் சாரல் மழை


புதுக்கோட்டையில் சாரல் மழை
x

புதுக்கோட்டையில் நேற்று சாரல் மழை பெய்தது.

புதுக்கோட்டை

சாரல் மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை இன்னும் முழுமையாக பெய்யவில்லை. போதிய மழை இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதையொட்டி புதுக்கோட்டையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் அவ்வப்போது வெயிலும் அடித்தது. பகல் 12 மணிக்கு மேல் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து மழை நிற்பதும், வெயில் அடிப்பதுமாக இருந்தது. அதன்பின் மாலை 3 மணிக்கு மேல் சாரல் மழை பரவலாக பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

குடை பிடித்தபடி

இதேபோல் மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. மழையின் காரணமாக பொதுமக்கள் சிலர் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி சென்றனர். தொடர்ந்து இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மணமேல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன்காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கனமழை காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பலத்த காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.


Related Tags :
Next Story