ராஜபாளையத்தில் சாரல் மழை
ராஜபாளையத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சாரல்மழை
ராஜபாளையம் நகர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் சாரல் மழை பெய்தது. மேலும் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பெய்த சாரல் மழையால் மழைநீர் தேங்கி இருந்தன.
இதில் பஞ்சு மார்க்கெட் நேரு சிலையிலிருந்து பழைய பஸ் நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, காந்தி கலை மன்றம், சங்கரன்கோவில் முக்கு, சொக்கர் கோவில் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். அதேபோல சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், தளவாய்புரம், புனல் வேலி, புத்தூர், நல்லமங்கலம், முகவூர், சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர் ஆகிய இடங்களில் சாரல் மழை பெய்தது.
இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் இப்பகுதியில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது.
நிலத்தடி நீர் மட்டம்
தொடர்ந்து சாரல் மழை பெய்தால் விவசாய பணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து கிணறுகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் கூறினர்.