சிவகிரியில் பலத்த மழை


சிவகிரியில் பலத்த மழை
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் பலத்த மழை பெய்தது

தென்காசி

சிவகிரி:

சிவகிரியில் நேற்று மாலை 5 மணி முதல் 6.45 மணி வரை பலத்த மழை பெய்தது. முன்னதாக மாலை 3 மணி அளவில் வெயில் தாக்கம் குறைந்து மேக மூட்டமாகவே காணப்பட்டது. திடீரென 5 மணி அளவில் கனமழை பெய்ய தொடங்கியது. அப்போது தேரோடும் முக்கிய ரதவீதிகளில் மழைநீர் பாய்ந்து சென்றது. மக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர். மழை பெய்தபோது பலத்த காற்றும் வீசியது. மின்தடையும் ஏற்பட்டது. தற்போது பெய்த மழை நெல் நாற்று நடுவதற்கு உகந்ததாக இருப்பதாக விவசாயிகள் கூறினர்.



Next Story