தேனியில் பலத்த மழை


தேனியில் பலத்த மழை
x

தேனியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது

தேனி


தேனியில் இன்று மாலை 6.30 மணியளவில் சாரல் மழை பெய்தது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது. சனிக்கிழமையான நேற்று தேனி வாரச்சந்தை வழக்கம் போல் நடந்தது. நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கடைகள் அமைத்திருந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வந்திருந்தனர். இந்நிலையில் பலத்த மழை பெய்ததால் வாரச்சந்தை வளாகத்தில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியது. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். சேறும், சகதியுமாக மாறிய வளாகத்தில் வைத்து காய்கறிகளை விற்கும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டனர்.


Related Tags :
Next Story