திருச்சியில் பலத்த மழை


திருச்சியில் பலத்த மழை
x

திருச்சியில் பலத்த மழை பெய்தது.

திருச்சி

திருச்சியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மழை மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மதியம் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணி அளவில் பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு 8 மணி வரை நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதில் மத்திய பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தும் இடத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடந்தது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும் மேலப்புதூர் சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் சென்றன. மேலும் கே.கே.நகர், பொன்மலைப்பட்டி, ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.


Next Story