உடையார்பாளையம் பகுதியில் பலத்த மழை


உடையார்பாளையம் பகுதியில் பலத்த மழை
x

உடையார்பாளையம் பகுதியில் பலத்த மழை பெய்தது.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் நேற்று மாலை குறைந்து, குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் வானில் கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் உடையார்பாளையம், முனியத்தரியன்பட்டி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, கழுமங்கலம், கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், தத்தனூர், வெண்மாண்கொண்டான், மணகெதி, சோழங்குறிச்சி, அழிசிகுடி, பருக்கல், காடுவெட்டாங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story