வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை


வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை
x

பலத்த மழைவேதாரண்யம் பகுதியில் பலத்த மழை பெய்தது. கோடியக்கரையில் அதிகபட்சமாக 80 மி.மீ.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை பெய்தது. கோடியக்கரையில் அதிகபட்சமாக 80 மி.மீ. மழை பதிவானது.

பலத்த மழை

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த ஒருவாரமாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென பலத்த மழை பெய்தது.இந்த மழை 3 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

கோடியக்கரையில் 80 மி.மீ. பதிவு

இதேபோல் கோடியக்கரை, அகஸ்தியன்பள்ளி, தோப்புத்துறை, நெய்விளக்கு, ஆதனூர், கருப்பம்புலம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழை சம்பா சாகுபடிக்கு ஏற்றது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர் அதிகபட்சமாக கோடியக்கரை பகுதியில் 80 மி.மீ பதிவானது. கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

வனப்பகுதியில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story