வேலூரில் சாரல் மழை


வேலூரில் சாரல் மழை
x

வேலூரில் சாரல் மழை பெய்தது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்தபடி சென்றனர். நடந்து சென்றவர்கள் குடை பிடித்தபடியும், தலையில் பிளாஸ்டிக் கவர்களை மாட்டிக் கொண்டும் சென்றனர். இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.


Next Story