வேலூரில் சாரல் மழை


வேலூரில் சாரல் மழை
x

வேலூரில் சாரல் மழை பெய்தது.

வேலூர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் சில நாட்களில் மழை பெய்தது. ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு பருவமழை பெய்யவில்லை. கடந்த சிலநாட்களாக மாவட்டம் முழுவதும் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சாரல் மற்றும் மிதமான மழை தொடந்து பெய்தது. மழைகாரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. அதனால் மாணவ-மாணவிகள் குடைகளை பிடித்தப்படியும், சிலர் மழையின் நனைந்தபடியும் பள்ளிக்கு சென்றதை காணமுடிந்தது. அதேபோன்று வேலைக்கு சென்றவர்களும் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். அதன்பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 3 மணியளவில் சிறிதுநேரம் மிதமான மழை பெய்தது. நாள் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷண நிலை காணப்பட்டது. அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story