தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில்  நாளை கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்
x

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டின் மேல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில தினங்களாக சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக திருபுவனத்தில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி, நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி மற்றும் ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.


Next Story