நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 7 July 2023 1:41 PM IST (Updated: 7 July 2023 1:42 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

07-07-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைபகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

08-07-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

09-07-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10-07-2023 முதல் 11-07-2023 வரை:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story