தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 2 Nov 2022 9:18 AM IST (Updated: 2 Nov 2022 11:04 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த மாதம் 29-ந் தேதி பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 5-ந் தேதி வரை அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை தற்போது மஞ்சள் எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Next Story