தொண்டியில் கொட்டித்தீர்த்த கனமழை


தொண்டியில் கொட்டித்தீர்த்த கனமழை
x

தொண்டியில் பெய்த பலத்த மழையால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டியில் பெய்த பலத்த மழையால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன.

பலத்த மழை

தொண்டியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு திடீரென்று பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பலத்த காற்று வீசியதால் தொண்டி பகுதியில் ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து பெய்தது.

மரங்கள் சாய்ந்தன

தொண்டி வெள்ளை மணல் தெரு, காமாட்சி அம்மன் கோவில் அருகே மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து கிடந்தன. மேலும் கோடிவயல் கிராமத்திற்குச் செல்லும் பாதையில் 2 மின்கம்பங்கள் விழுந்து கிடந்தன. இதனால் தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாடானை தாசில்தார் செந்தில் வேல்முருகன் உடனடியாக மின் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின்தடை மற்றும் மின் கம்பங்கள் சேதம் அடைந்ததை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிந்து பணியாளர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழை அளவு

தொண்டியில் 68.மி.மீ., வட்டாணத்தில் 42.60.மி.மீ., திருவாடானையில் 31.20.மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதேபோல் திருவாடானை தாலுகா முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இந்த மழையால் பூமி குளிர்ந்தது. இந்த மழை காரணமாக விவசாயிகள் கோடை உழவு பணிகளை மீண்டும் தொடங்கி உள்ளனர்.


Related Tags :
Next Story