கனமழை எச்சரிக்கை எதிரொலி; தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்
அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை,
கனமழை எச்சரிக்கை காரணமாக அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி அகிலேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு அழைப்பு விடுக்கும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு செல்ல தலா 25 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிக்கான அதிநவீன கருவிகள், பொதுமக்களை காப்பாற்றுவதற்கான பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் மீட்புப் படையினர் ஆயத்தமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்னை பேரிடர் மேலாண்மை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அகிலேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story