அய்யன்கொல்லியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை-மின்கம்பம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
அய்யன்கொல்லியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை- மின்கம்பம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி
பந்தலூர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொளப்பள்ளி, உப்பட்டி, அய்யன்கொல்லி, பதிர்காடு ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு அய்யன்கொல்லியில் சூறாவளிக்காற்றுடனும் கன மழை பெய்தது. அப்போது நம்பியார்குன்னு-சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் அய்யன்கொல்லி மாரியம்மன்கோவில் அருகே பெரியமரம் ஒன்று சாய்ந்து மின்கம்பம் மேல் விழுந்்தது. இதனால் அந்த மின்கம்பம் முறிந்து சாலையின் நடுவில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்தடையால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியது. இதுகுறித்து அறிந்ததும் அய்யன்கொல்லி உதவிமின்பொறியாளர் தமிழரசன் தலைமையில் மின்வாரிய துறையினர் அங்கு சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story