இடி- மின்னலுடன் பலத்த மழை


இடி- மின்னலுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 18 Sept 2022 12:15 AM IST (Updated: 18 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நேற்று காலை கடுமையான வெயில் கொளுத்தியது. பின்னர் மாலை 3 மணிக்கு மேல் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த மழையால் வாறுகால், மெயின் ரோடு பகுதியில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க வழி பாதையில் மழைநீர் தேங்கியது. இதேபோல் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட ஓடையிலும் கழிவுநீரும், மழை நீரும் சேர்ந்து வெள்ளமாக ஓடியது.

ெரயில்வே சுரங்க வழி பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர். சுரங்க வழி பாதையில் ஒரு பெண் சிக்கிக் கொண்டார். அவரை நகரசபை சுகாதார பணியாளர் ஒருவர் மீட்டு வெளியே கொண்டு வந்தார். அவரை பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story